
முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, காவல்துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒழுக்காற்று விசாரணை குறித்த அறிக்கை மூன்று நாட்களில் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
விசாரணை அறிக்கை கிடைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வரையில் ருவான் குணசேகர, ஊடகம் தொடர்பான எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தை மீறி பத்திரிகைகளுக்கு தகவல்களை வழங்கியதாகவும் இதன் அடிப்படையில் ருவான் குணசேகர, காவல்துறை ஊடகப் பேச்சாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை ஊடகப் பிரிவு மாற்றியமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.