
அண்மையில் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேல் மாகாணசபையின் உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம்;, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டம் உள்ளட்ட திர்மானங்களை வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைத்தல் மற்றும் சமஸ்டி ஆட்சி முறைமையை வழங்குதல் ஆகியன ஆபத்தானவை என நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
மொழியை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டங்கள் பாதகமான நிலைமையையே ஏற்படுத்தும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.