கோஹ்லியை தோற்கடித்த சந்தோஷத்தை கோபமாக வெளிப்படுத்திய கம்பீர்!

339

ஐபிஎல் தொடரில் நேற்று றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி உறுதி என அறிந்த கொல்கத்தா அணித்தலைவர் கவுதம் கம்பீர், தான் கோபத்தை கொந்தளிப்பாக வெளிப்படுத்தியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

gambhir_2114135f

நேற்று பெங்களூரில் நடந்த போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி 185 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர், விளையாடிய கொல்கத்தா அணியின் தொடக்க துடுப்பாட்டக்காரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் கம்பீர் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார், கம்பீரின் ஆட்டமிழப்பிற்கு நடுவர் அளித்த தவறான முடிவே காரணம் என கூறப்படுகிறது.

மோசாமான நிலையில் இருந்த கொல்கத்தா அணியை யூசுப் பதான் நிலைநிறுத்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

கொல்கத்தா அணி 8 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு எட்டிய போது, வெற்றி உறுதி என அறிந்த பிறகு, தான் உட்கார்ந்து கொண்டிருந்த நாற்காலியை எட்டி உதைத்தும், அணிந்து கொண்டிருந்த துண்டை தூக்கி எறிந்தும் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கம்பீரின் கொந்தளிப்பிற்கு, நடுவர் அளித்த தவறான முடிவு காரணமா? கோஹ்லியிடம் தோல்வியை தவிர்த்தது காரணமா? என கேள்வி எழுந்துள்ளது.

கம்பீரின் இந்த செயல்பாட்டின் மூலம் கம்பீர் , கோஹ்லி இடையே நிலவி வந்த சர்ச்சை முடியவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போட்டியின் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE