ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அவுஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் இடம்பெற்றிருந்தார்.
இவர் தற்போது கடுமையானமுதுகுவலியின் காரணமாக எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
எனவே இவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹஷீம் அம்லா சேர்க்கப்படலாம் என தெரிகிறது.
ஏலத்தின் போது ரூ.1 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்படிருந்த அம்லா ஏலம் போகவில்லை, அதுமட்டுமின்றி இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடியதில்லை.
நல்ல பார்மில் இருக்கும் அம்லா கடைசியாக நடந்த உலகக் கிண்ண டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதுவரையிலும்7 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.