கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு தாமதமாக பந்து வீசிய குற்றத்திற்காக அணித்தலைவர் என்ற முறையில் கோஹ்லிக்கு ரூ.24 லட்சமும், மற்ற வீரர்களுக்கு ரூ.6 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக புனே அணிக்கு எதிரான போட்டியிலும் தாமதமாக பந்துவீசியதற்காக கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலை மீண்டும் நீடித்தால் கோஹ்லி ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம்.