ஜெஸ்ஸி மேல் அப்படி என்ன காதல்? ஸ்பெஷல் தொகுப்பு

350

ஜெஸ்ஸி மேல் அப்படி என்ன காதல்? ஸ்பெஷல் தொகுப்பு - Cineulagam

சினிமாவில் கதாபாத்திரங்கள் திரை என்பதை தாண்டி ரசிகர்களின் வாழ்க்கையில் பயணப்படவும் செய்கின்றது. அதில் ஒரு சிலர் கதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் இந்த கதாபாத்திரம் தொடர்வது போலவே எண்ணுவார்கள்.

அப்படி இருக்கையில் த்ரிஷா 11 வருடம் நடித்தாலும், இன்றும்..இல்லை என்றுமே மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத ஒரு கதாபாத்திரம் என்றால் விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி தான்.

இந்த ஜெஸ்ஸி அப்படி என்ன ஸ்பெஷல்?, ஒரு அப்பர் மிடில்கிளாஸ் பெண், வாழ்க்கையில் சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் அப்பா, அம்மா, மதம் அதன் கொள்கை என ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைப்படுகிறார்.

இதை கார்த்திக் காதல் என்ற வார்த்தையால் ஜெஸ்ஸியின் ஆசைகளை தூண்ட, ஆரம்பத்திலிருந்தே பிடித்தும் விலகி நிற்கிறார் த்ரிஷா. ஆனால், கார்த்தியின் உண்மையான அன்பு அவரை காதலில் விழவைக்கின்றது.

பிறகு காதல் உறுதியாகிவிட்டதே, பிறகு என்ன என்று ஜெஸ்ஸியிடமிருந்து கொஞ்சம் விலகி தன் வாழ்க்கையில் செட்டில் ஆக புறப்படும் கார்த்தி, இங்கு தான் பிரச்சனை, எப்போதும் குழப்பத்தில் இருக்கும் ஜெஸ்ஸி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கும் போது கார்த்தி குழப்பத்தில் உள்ளான்.

இதனால், நான் நம்பி வருகிறேன் என்று கூறிய போது நீ யோசித்தாய், அதனால், இந்த காதல் வேண்டாம் என்று சிறுப்பிள்ளை தனமாக சொல்லி பிரிந்தாலும், இது தான் இயல்பு. அந்த கதாபாத்திரம் பெண்களின் மனநிலையை அப்படியே கண்ணாடியாக பிரதிப்பலித்தது.

நீ வேண்டாம் என்று ஒரு ஆணை ஒதுக்கி சென்றாலும், பல ஆண்களுக்கு ஜெஸ்ஸி தான் பேவரட், அது தான் ஜெஸ்ஸியின் ஸ்பெஷல். இதுப்போல் மீண்டும் ஒரு ஜெஸ்ஸி போல் ஒரு கதாபாத்திரத்தில் த்ரிஷாவை பார்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும். Happy Birthday Trisha

SHARE