களனி-பட்டிவில தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் தீயனைப்பு படையின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் களனி பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த தீயினால் தொழிற்சாலை பாரியளவில் எரிந்து சாம்பலாகியுள்ளதாக களனி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.