சிலாவத்துறை கடற்பிரதேசத்தில் 120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 5 இந்தியப்பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கோசல வர்ணகுலசூரியதெரிவித்துள்ளார்.
அத்துடன் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சாவுடன்சந்தேக நபர்களை கல்பிட்டிய பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளதாக அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை தற்சமயம் முன்னெடுத்து வருவதாக கடற்படைபேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.