20 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சாரதி

240

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி நானுஓயா எடின்புரோ பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வாகனத்தில் சாரதியும் மற்றொருவரும் பயணித்துள்ளதாகவும், சாரதி பாய்ந்து உயிர் தப்பியுள்ளதாகவும் மற்றொருவர் படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE