நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்ட மட்டத்திலான தமிழ் மொழித்தினப் போட்டிகள் கடந்த செவ்வாயன்று ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளன.
இப்போட்டிகளில் கோட்டத்திலுள்ள இருபது பாடசாலைகளின் போட்டியாளர்கள் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.
இப்போட்டிகளில் பங்குபற்றியுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் தங்களது போட்டிகளில் பதினாறு முதலாம் இடங்களையும், ஐந்து இரண்டாம் இடங்களையும் பெற்று கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளனர்.
போட்டிகளில் பங்குபற்றியுள்ள மாணவர்களையும் பயிற்றுவித்துள்ள ஆசிரியர்களையும் நிகழ்ச்சிபொறுப்பாசிரியரையும் அதிபர் திரு.என்.முத்துகுமார் அவர்கள் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
(க.கிஷாந்தன்)