நுவரெலியா கல்வி வலயத்தில் அக்கரப்பத்தனை தோன்பீல்ட் தோட்டப்பாடசாலையில் தரம் 5ல் கல்வி பயிலும் நவரட்ணம் தாரணி அண்மையில் ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் தின போட்டியில் பேச்சு போட்டி ஒன்றில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
மிகவும் கஷ்ட நிலையை எதிர்கொண்டு நடாத்தும் தோன்பீல்ட் தோட்ட பாடசாலையில் கல்விக்கான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இங்கு கல்வி பயிலும் இம்மாணவி இப்பாடசாலைக்கு பேச்சு போட்டி ஊடாக முதலாம் இடத்தை பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்துள்ளமை அணைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.