மேபீல்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு பொருட்கள்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
தற்காலிகமாக கலாசார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தினால் உலர்உணவு பொருட்கள் வழங்கப்பட்டது கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கிய நிலையில் பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உலர்உணவு பொருட்களை வழங்க எவறேனும் முன்வர வேண்டும் என முகாமையாளர் ஊடகம் வாயிலாக கேட்டிருந்தார். அதற்கிணங்க மண்சரிவு அபாயம் எதிர்நோக்கி தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான உலர்உணவு பொருட்களை தொழிலாளர் தேசிய சங்கம் உடனடியாக வழங்க முன்வந்தது. அதன்படி அட்டன் பிரதேச அமைப்பாளர் ஜெஸ்டீன் 6 ஆம் திகதி காலையில் குறித்த பொருட்களை வழங்கி வைத்தார். அவர் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கி வைத்தார் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 14 சிறுவர்கள் 20 பெண்கள் 25 ஆண்கள் அடங்கலாக 59 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்