கிரிக்கட் புள்ளி முறைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல – மைக்கல் வோகன்

292
ap_2790729g

கிரிக்கட் புள்ளி முறைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கட் நிர்வாகம் கிரிக்கட் புள்ளி முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்த முறைமையை இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கட் வர்ணணையாளருமான வோகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டிகளுக்கு புள்ளி வழங்கும் முறையைமானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறையைமானது சிக்கல் நிறைந்தது எனவும் அதனை அறிமுகம் செய்ய வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கட் போட்டித் தொடரின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டித் தொடர்களின் முடிவுகளுக்கு புள்ளி வழங்கி ஒட்டுமொத்த அடிப்படையில் வெற்றியாளரை தெரிவு செய்யும் முறைமை இந்த புள்ளி முறைமை உள்ளடக்கியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இலங்கை பாகிஜஸ்தான் அணிகள் இங்கிலாந்துக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில் இந்த முறைமை அறிமுகம் செயப்பட உள்ளது.
இந்த முறைமையானது வெற்றியளிக்காது என வோகன் தெரிவித்துள்ளார்.

SHARE