சர்வதேச நாடுகளுடன் வர்த்தகத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேசத்துடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் நோக்கத்துடன் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வணிக மையம் ஏற்பாடு செய்த உலக ஏற்றுமதி அபிவிருத்தி அமைப்பின் இந்த வருடத்திற்கான முக்கிய மாநாடு இலங்கையில் நடாத்துவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றது.
இந்த உடன்படிக்கையானது அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் சர்வதேச வர்த்தகமையத்தின் நிர்வாக இயக்குனர் அரன்வா போன்சாலெஸ் ஆகிய இருவருக்கம் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில்கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளின் வர்த்தகத் தலைவர்கள், முதலீட்டு ஊக்குவிப்பாளர்கள், சர்வதேச அமைப்புக்களின் அதிகாரிகள் உள்ளிட்ட 600 அதிகமானஉறுப்பினர்கள் கலந்துக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.