நீர்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவு கழிவுகளினால் மின் உற்பத்தி பாதிப்பு
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவாக கானப்படுவதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
மலைகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்ற போதிலும் நீர் மின் உற்பத்தில் பிரதான பங்கை வகிக்கும் காசல்ரீ நீர்தேக்கத்தில் 100 க்கு 40 வீதமும் மவுசாக்கலையில் நீர்தேக்கத்தில் 100 க்கு 55 வீதமும் நீர்மட்டம் குறைவடைந்து கானப்படுகின்றது
மேலும் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் களனி ஆற்றின் கிளை ஆறான டிக்கோயா ஆற்றில் பிரதேசவாசிகள் கழிவுகளை கொட்டுவதனால் மழையில் அடித்து செல்லும் கழிவுகள் காசல்ரீ நீர்தேக்கத்தில் கலப்பதனால் நீர் மாசடைவதுடன் மீன் உற்பத்தியிலும் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும் மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்