சிறுத்தை தொல்லையால் அக்கரப்பத்தனை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

267

அக்கரப்பத்தனை காவல்துறைக்குட்பட்ட அல்பியன் – பிரஸ்டன் தோட்ட தேயிலை மலையிலிருந்து இரு தினங்களாக இரண்டு சிறுத்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

இதன் காரணமாக இப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு தொழில் செய்ய முடியாத நிலையில் மக்கள் பயந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

தோட்ட குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்படும் நாய்கள், கோழிகள் என கால்நடைகளை வேட்டையாடியுள்ளதால் தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் அச்ச நிலை நிலவி வருகின்றது.

தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிரி தலைமையிலான பொலிஸ் குழு ஒன்று 10.05.2016 அன்று குறித்த தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்திற்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.

அத்தோடு வனப்பகுதியை அண்மித்துள்ள தோட்டங்களுக்கும் மக்கள் மத்தியில் அறிவுறுத்தல் வழங்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டு வருகின்றமை மேலும் குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

0847f8ab-d8bc-48d4-b17c-05c9727ecd36

SHARE