வவுனியாவில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் பத்து பேர் விடுதலை

261

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று 06 முன்னாள் போராளிகளும், நான்கு கிராம உத்தியோகத்தரும் விடுதலை செய்யப்பட்டனர்.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம் மற்றும் மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் அமைச்சின் அனுசரணையுடன் பூந்தோட்டம் புனர்வாழ்வு பின்னாய்வு பொறுப்பதிகாரி பெனாண்டோ தலமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர். கெமிடோன் கலந்தகொண்டு பயிலுனர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
முன்னாள் போராளிகள் ஆறு பேருக்கும் ஒரு வருடம் புனர்வாழ்வும் நான்கு கிராம உத்தியயோகத்தர்களுக்கு மூன்று மாதங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், கனிஸ்ட அதிகாரிகள், பொலிஸ் மற்றும் வான்படை உத்தியோகத்தர்கள், புனர்வாழ்வளிக்கப்படும் பயிலுனர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தகவல் :- காந்தன்

 

SHARE