முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம் – செம்மணியில் சுடரேற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது

251

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று செம்மணியில் சுடரேற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்  இன்று 12ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 18 ஆம் திகதி புதன்கிழமை வரையில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

“1948 ஆம் ஆண்டு முதல் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அனைவரையும் நினைவுகூறும் முகமாக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.

அதனை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணத்தில் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட செம்மணிப் பகுதியில்  நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்த உள்ளோம்

எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 6 மணிக்கு  கிழக்கில் வெலிக்கடை தியாகிகள் நினைவரங்கில் நினைவுச் சுடர் ஏற்றவுள்ளோம்.

தொடர்ந்து, எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமை முள்ளிவாய்க்காலில் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் அஞ்சலி செய்யவுள்ளோம்.

அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரையில் ஆலயங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் நடைபெறும்.” என தெரிவித்தார்.

SHARE