பசில் ராஜபக்ஸ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று குற்றப்புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் மாத்தறை பிரதேசத்தில் காணி தொடர்பான விசாரணை செய்வதற்கு வந்திருந்த வேளையில் இந்த கைது இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை இன்று மாலை இவரை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஸ முன்னாள் பொருளாதார அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.