
ராஜபக்ஸக்கள் இந்தியாவிலிருந்து ஆட்களை தருவித்து தம்மை கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து படகு மூலம் ஆட்களை தருவித்து தம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதம அதிகாரி காமினி செனரத்தின் சாரதியொருவர் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியாமல் இருப்பதற்காக இவ்வாறு இந்தியாவிலிருந்து ஆட்களை தருவிக்க திட்டமிடப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம் அனைவருக்கும் உயிர் ஆபத்து இருப்பதாகவும் இது குறித்து ஜனாதிபதியும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்நோக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2015 ஜனவரி மாதம் 7ம் திகதி சில வங்கிகளிலிருந்து 1260 கோடி ரூபா பணம் மீறப் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அந்தப் பணத்தை தாம் காமினி செனரத்திடம் வழங்கியதாகவும் சாரதி தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அரச இயந்திரம் மாற்றமடையவில்லை எனவும் இதனால் குற்றவாளிகளை தண்டிப்பதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றம் இழைத்தவர்கள் லஞ்சம் வாங்கும் அரச அதிகாரிகளைப் பிடித்து பணத்தைக் கொடுத்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.