
ஊழலுக்கு எதிரான மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் உரையாற்றவுள்ளார்.
பிரித்தானியாவில் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் பிரித்தானிய புறப்பட்டுச்சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பும் ஜனாதிபதி, இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.