
மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற கால மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்று வரும் விசேட கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் சமாதானத்தை வென்றெடுக்க கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முரண்பாடுகள் பிரச்சினைகளை இராணுவ வழிகளில் முற்றுபெறச் செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்கான மூல காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்குவதே மிகவும் அவசியமானது என அவர் குறிபபிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவதாகவும் இதனால் இலகுவில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறுபான்மை சமூகத்தினருக்கு சம உரிமைகளை வழங்கும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.