பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

247

மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

தேயிலை உற்பத்தியின் அதிகரிப்பால் நாளொன்றிற்கு 18 தொடக்கம் 20 கிலோ வரையான தேயிலை கொழுந்தினைப் பறிக்கக் கூடியதாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் நாளொன்றிற்கு 40 தொடக்கம் 50 கிலோ வரையான தேயிலை கொழுந்தினை பறிப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் தேயிலை உற்பத்தி அதிகரிப்பனைத் தொடர்ந்து 1 கிலோவிற்கு 23 ரூபாய் அடிப்படையில் சம்பளம் வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக சில தனியார் தேயிலை தோட்ட நிறுவனங்களின் முகாமையாளர்கள் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE