தொழிலாளர் உரிமையை வென்றெடுக்க மலையக தமிழ் தலைவர்கள் கை கோர்க்க வேண்டும் இம்மாத சம்பள சீட்டிலும் புதிதாக ஒன்றும் இல்லை

278

கடந்த தை பொங்கல் தினத்தன்று அட்டன் டன்பார் மைதானத்தில் இடம் பெற்ற தேசிய தை பொங்கல் விழாவின் போது தமிழ் முற்போற்கு கூட்டனியின் அங்கம் வகிக்கும் மலையகத்தின் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்களுடன் பலரும் கலந்து கொண்டனர்.

நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் 2500 ரூபாவை இம்மாத சம்பளத்துடன் அரசாங்கம் தோட்ட தொழிளாலர்களுக்கு உயர்த்தி தரும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி கூரிவந்த போதிலும் தோட்டத் தொழிலாளர்களின் இம்மாத சம்பள சீட்டில் (துண்டில்) இத்தொகை சேர்க்கபடவில்லை. ஏன்பதால் தொழிளாலர்கள் கடுப்பாகியுள்ளனர்.

இதன் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் கூட்டு ஒப்பந்தத்திற்க்கு அப்பால் 2500 ரூபாய் சம்பள உயர்வை அரசு வழங்கும் இதற்க்கு தொழிலமைச்சர் ஜோன் செனிவிரட்ன இனக்கம் தெரிவித்துள்ளார் என்றார்.

இன்றைக்கு ஐந்து மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் இந்த சம்பள உயர்வு கையில் வந்து சேரவில்லை என தெரிவிக்கும் தொழிலாளர்கள், இ, தொ, கா மற்றும் கூட்டு கமிட்டியினர் 1000 ரூபாவை முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்திருப்பதாக தெரிவித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது இதுவும் கையில் வந்து சேரவில்லை என தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் விலைவாசி மற்றும் வரிசுமையென உயர்வடைந்துள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க தொழிலாளர்கள் வழங்கிய வாக்குக்கு இது தான் கைமாறா? ஏன்ற கேள்வியை தொழிலாளர்கள் எழுப்புகின்றார்கள்.

சம்பள உயர்வுக்கு காலம் இழுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த மகளீர் தினம், மற்றும் மே தினம் போன்றவற்றிலும் உத்தரவாதத்துடன் பேசப்பட்டடு வந்த சம்பள உயர்வு பேச்சி அன்னையர் தின காலத்திலாவது நிறைவு பெறுமா? என்ற ஏக்கத்தில் தொழிலாளர்கள் இருப்பதாகவும் எங்களுக்கு இம்மாத சம்பளத்திலும் எந்த உயர்வும் சம்பள சீட்டில் குறிப்பிடப்படவில்லை என தலவாக்கலை பிரதேச தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட சம்பள பேச்சுவார்த்தை எப்போது மீண்டும் தொடரும்.

இன்று தேயிலை நல்ல விளைச்சலை கொண்டுள்ளது பேச்சுக்கான காலம் நேரம் சரியாக அமைந்து வருகின்றது ஆனால் சம்பள பேச்சுவார்த்தை எப்போது? என கேள்வி எழுப்புகின்றார்கள்.

அரசாங்கத்தில் மூன்று முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை கொண்டுள்ள மலையக தமிழ் தலைவர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு வெற்றிகான காண முடியாமல் மலையகம் தழுவிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்புவிடுவதற்கா! வாக்கு அளித்தோம். என கூறும் தொழிலாளர்கள் முதலில் மலையகத்தில் அனைத்து தமிழ் தலைவர்களும் ஒன்றிணைந்து போராட முன்வந்தால் தொழிலாளர்களாகிய நாமும் தயார் என சொல்கின்றனர்.

ஆகையால் அமைச்சு பதவிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் அப்பாவிப்பட்ட தொழில் சங்க முடிவுகளுக்கு தமிழ் தலைமைகள் செல்லவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இனிமேலும் அறிக்கைகள் விடுவதை தவிர்த்துக் கொண்டு செய்ய போகும் காரியத்தில் தமது கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கும் தொழிலாளர்கள் எது எவ்வாறாயினும் வழங்கப்படும் சந்தாப்பணம் மாதம் மாதம் வழங்கியே வருகின்றோம். இது எமது உரிமையை பாதுகாக்க வழங்கப்படுவது என்பதை இவர்கள் மறந்துவிட கூடாது எனவும் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மக்களின் தேவைக்கு முக்கிய பொறுப்பு கூற கடமைப்பட்டுள்ள தொழிற்சங்கங்களும் அமைச்சர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவர்களுடன் மாகாண சபை உறுப்பினர்களும் முன்வந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கின்றார்கள்.

(க.கிஷாந்தன்)

4bda5563-d191-42bc-b17d-2e1435e55a58

SHARE