பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை குறித்த விசாரணைகளின் போது உயர் காவல்துறை அதிகாரிகள் அழுத்தம்

296

vasim_CI

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை குறித்த விசாரணைகளின் போது உயர் காவல்துறை அதிகாரிகள் அழுத்தம் பிரயோகித்தனர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட காலப்பகுதியில் பல காவல்துறை உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் விசாரணைகளில் தலையீடு செய்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் 20 காவல்துறை உத்தியோகத்தர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
தாஜூடின் கொலை குறித்த சீ.சீ.ரீ.வி கமராக் காட்சிகள் கனடா மற்றும் இங்கிலாந்து நிபுணர்களின் ஒத்துழைப்புடன் ஆய்வு செய்யபபட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

SHARE