இலங்கை ஜனாதிபதியின் விஜயம் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் – இந்தியா

276
இலங்கை ஜனாதிபதியின் விஜயம் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் - இந்தியா:-

இலங்கை ஜனாதிபதியின் விஜயம் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் வழியமைக்கும் என தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்திய விஜயம் மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரி, சாஞ்சியில் அனகாரிக தர்மபாலவின் சிலை ஒன்றையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்க உள்ளார்.
இந்த இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

SHARE