இதுக்கு கூடவா பொலிசை கூப்பிடனும்? நபரை கைது செய்து சிறையில் அடைத்த பொலிஸ்

295

625.117.560.350.160.300.053.800.210.160.70

சுவிட்சர்லாந்து நாட்டில் காவல் துறையை சேர்ந்த அவரச எண்ணை அடிக்கடி தொடர்புக்கொண்டு தொந்தரவு செய்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சுவிஸின் ஜெனிவா நகரில் பெயர் வெளியிடப்படாத 33 வயதான நபர் ஒருவர் வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்.

இவரது அன்றாட பணிகளில் முக்கியமானது ‘காவல் துறையின் அவசரகால எண்ணான 117 என்ற எண்களை அடிக்கடி தொடர்புக்கொண்டு பொலிசாரை உதவிக்கு அழைப்பது தான்.ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல…இந்த ஆண்டு தொடக்கம் முதல் 117 என்ற எண்ணை அவர் 59 முறை தொடர்புக்கொண்டு பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ளார்.

ஒவ்வொரு முறை அழைக்கும்போதும் ஒவ்வொரு காரணத்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒரு வாரத்திற்கு முன்னால் தான் இவரது அழைப்பு காவல் துறையின் தலைமை அதிகாரிக்கு சென்றுள்ளது.

அப்போது, ‘கத்தியால் எனது கையை வெட்டிக்கொண்டதாகவும், உடனடியாக வந்து என்னை காப்பாற்றுமாறு’ பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ளார்.

நபரின் வீட்டிற்கு சென்று பொலிசார் சோதனை செய்தபோது, அந்த நபர் கத்தி காயம் எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.

நபரிடம் பொலிசார் விசாரணை நடத்தியபோது, ’தனது தாயார் வீட்டிற்கு தன்னை யாரும் அழைத்துச் செல்ல மறுக்கின்றனர். பொலிசாரை தொடர்புக்கொண்டால், அவர்களது வாகனத்தில் தன்னை தாயார் வீட்டிற்கு அழைத்து செல்வார்கள்’ என்ற காரணத்திற்காக தான் பொலிசாரை அழைத்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நபரின் வினோதமான காரணத்தினால் எரிச்சலடைந்த பொலிசார் அவர் அழைத்த எண்ணை சோதனை செய்தபோது, இந்த ஆண்டு தொடக்கம் முதல் 59 முறை அவர் பொலிசாரின் அவசர எண்ணை தொடர்பு கொண்டது தெரியவந்தது.

பொலிசாரை உரிய காரணமின்றி தொந்தரவு செய்த குற்றத்திற்காக அவரை பொலிசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி தேவையில்லாமல் பொலிசாரின் அவசர எண்ணை அடிக்கடி தொடர்புக்கொள்ளும் நபருக்கு அதிகபட்சமாக 3 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE