கனடா நாட்டில் பீட்சா சமைத்தபோது நிகழ்ந்த தீவிபத்தால் இரண்டு வீடுகள் தீக்கிரையாக உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வான்கூவர் மாகாணத்தில் உள்ள Langley என்ற நகரில் நேற்று பிற்பகல் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பிற்கு அருகில் உள்ள நபர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க, நகரில் இருந்த அனைத்து தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த போராடியுள்ளனர்.
இந்த விபத்தில் வீடு ஒன்று முற்றிலும் எரிந்து உருக்குலைந்து சென்றுள்ளது. அருகில் இருந்த மற்றொரு வீடும் இந்த விபத்தில் சிக்கி மிகவும் சேதமடைந்துள்ளது.
விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தியபோது, இதே பகுதியில் வசித்து வரும் மேத்தியூ என்ற நபர் பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது, ‘தீவிபத்து ஏற்படுவதற்கு முன்னதாக வீட்டின் உரிமையாளர் பின்னால் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ’பீட்சா’ சமைத்துக் கொண்டிருந்தார்.
இந்த அறையில் இருந்து தீஜுவாலைகள் அதிகளவில் பரவியதை பார்த்தேன். அதே சமயம், வீடு தீப்பற்றி எரிவதற்கு முன்னதாக பீட்சா சமைக்கப்பட்ட இடத்திலிருந்து தான் தீ பரவியது.
எனவே, வீட்டு உரிமையாளரால் தான் இந்த தீவிபத்து நிகழ்ந்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும், சரியான நேரத்தில் அப்பகுதி இளைஞர்கள் விரைந்து செயல்பட்டதால் இரண்டாவது வீடு குறைந்த சேதாரத்துடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.