சொனி நிறுவனத்துடன் கைகோர்த்த அனிருத்!

280

இசையமைப்பாளர் அனிருத்தின் தனிப்பாடல்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளின் உரிமைகளை சொனி நிறுவனம் பெற்றுள்ளது.

பல ஹிட் பாடல்களை கொடுத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

தற்போது அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு அனிருத்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய இசையில் தற்போது ‘ரெமோ’, ‘ரம்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மோகன் ராஜா இயக்கும் படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி தனிப்பாடல்களின் ஆல்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேரடி இசை நிகழ்ச்சி ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அனிருத்தின் தனிப்பாடல்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளின் உரிமைகளை சொனி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த பாடல்களை உலக அளவில் பிரபலமாக்க சொனி நிறுவனம் ஒப்பந்தத்தை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Aakko Movie Poster HD (9)_1

SHARE