
ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய டென்னிஸ் அணியில் இடம் பிடித்து இருந்த பெர்னார்ட் டாமிச் திடீரென விலகி இருக்கிறார்.
உலக தர வரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் பெர்னார்ட் டாமிச் தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு மற்ற போட்டிகளில் விளையாடுவது முக்கியம் என்பதால் இந்த கடினமான முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.