
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஹாங்காங் உள்நாட்டு டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாட உள்ளார்.
2015-ல் ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க், மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழைய கடுமையான பயிற்சிகளுடன் முயன்று வருகிறார், ஆனால் அவர் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. இவர் கடைசியாக டி20 ஆடியது 2012-ம் ஆண்டு, இதனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிக் பாஷ் லீக் அணிகள் கூட மைக்கேல் கிளார்க்கை கண்டுக்கொள்ளவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசத்திய கிளார்க், டி20 கிரிக்கெட்டில் இதுவரை பெரிதாக சாதிக்கவில்லை.
இந்நிலையில் இந்த மாத கடைசியில் 27-ம் திகதி முதல் 29-ம் திகதிவரை நடக்கவிருக்கும் ஹாங்காங் உள்நாட்டு டி20 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட மைக்கேல் கிளார்க் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.