இதேவேளை ஜூன் மாதம் நடுப்பகுதியாகும் போது இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவம் குறித்த இறுதி ஆலோசனை நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் எனவே மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் அது குறித்த முன்னேற்றமான நிலையே இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவத்தை தீர்மானிப்பதற்கான நேருக்கு நேர் கலந்துரையாடல்கள் ஜூன் மாதம் நடுப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் ஜூன் மாதம் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடரில் உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இலங்கை சார்பில் அறிக்கை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள உயர்மட்ட பிரதிநிதிகள் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது மனித உரிமையை பாதுகாத்தல் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என கூறப்படுகின்றது.
பெரும்பாலும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்படுகின்றது.
அத்துடன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதுடன் இலங்கையிடம் கேள்விகளை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயிட் அல் ஹுசைன் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் முடிவெடுப்பது இலங்கையினுடைய தீர்மானமாகும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை இலங்கைக்கு எதிர்வரும் மாதங்கள் மிகவும் தீர்க்கமானதாக அமையும் என்று செய்ட் அல் ஹுசேன் தெரிவித்திருந்தார்.
அத்துடன் இம்மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் விசெட அறிக்கையாளர்கள் இருவரும் தமது அறிக்கையை மனித உரிமை ஆணையாளரிடம் கையளிக்கவுள்ளனர்.