
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தோள் பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பிரசாத் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
எசெக்ஸ் அணியுடன் நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது பிரசாத் காயமடைந்திருந்தார்.
ஆரம்பத்தில் சிறு உபாதை என கருதப்பட்ட போதிலும் பின்னர் சற்றே பாரதூரமான உபாதை என மருத்துவ பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் பிரசாத் பங்கேற்க வாய்ப்பு இல்லை என அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் போர்ட் தெரிவித்துள்ளார்.