கேகாலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் மண்சரிவு மூவரைக் காணவில்லை.

248
 landslide_1_0-600x339-450x254

கேகாலையில் பாரிய மண்சரிவு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த மண் சரிவு காரணமாக மூன்று பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கேகாலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காணாமல் போனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மண்சரிவு காரணமாக கொழும்பு கண்டி வீதியின் கேகாலைப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வேறும் மாற்று வழிகளைப் பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளது.

SHARE