மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜட்டவர அவர்களின் பணிப்புரைக்கு அமைய குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் 5 கிலோ 450 கிராம் எனவும் அதன் பெறுமதி 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரனைகளின் பின்னர் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாகவும் மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.