மங்கள சமரவீரவை ஒதுக்கிய மைத்திரி

204

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள இரண்டு வெளிநாட்டுப் பயணங்களிலும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்காதது, அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனின் அழைப்பின் பேரில், லண்டனில் நடந்த ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் பிரித்தானியா சென்றிருந்தார்.

அதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், லண்டனில் இருந்தே, புதுடெல்லிக்குப் பயணமானார்.

இந்த இரண்டு பயணங்களிலும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவில்லை.

சிறிலங்கா அதிபரின் இந்த இரண்டு வெளிநாட்டுப் பயணங்களிலும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய, வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு பதில் பணிப்பாளர் சத்யா ரொட்றிக்கோ, சந்தர்ப்பம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரமே சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர், பயணம் மேற்கொள்வார் என்றும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அவர் பங்கேற்பார் என்றும் தெரிவித்தார்.mangala

SHARE