தமிழக சட்டசபை தேர்தல் 2016! வாக்களித்த பிரபலங்கள் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

321

 

தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம் நடத்தப்பட்ட Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

KARU1

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தமுள்ள 232 தொகுதிகளிலும் ( 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.) இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம், வெவ்வேறு ஊடகங்கள் நடத்தியுள்ள Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

 

அதிமுக 35 சதவீத வாக்குகளுடன் 95 முதல் 99 இடங்களை கைப்பற்றும் என்றும், திமுக 39 சதவீத வாக்குகளுடன் 114 முதல் 118 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நலக்கூட்டணி 14, பா.ஜனதா 4, இதர கட்சிகள் 9 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிமுக 89 முதல் 101, திமுக 124 முதல் 140 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 0-3, மற்ற கட்சிகள் 4 – 8 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிமுக 139, திமுக 78, மற்ற கட்சிகள் 17 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சிதலைவர்கள், நட்சத்திரங்கள், குடிமக்கள் என அனைவரும் தங்களது வாக்குபதிவினை மும்முரமாக செலுத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி

கோபாலபுரம் தொகுதிக்கு வாக்களித்த வந்த கருணாநிதி அவர்களிடம் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திமுகவின்வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என ஒரு வார்த்தையில் பதிலளித்துள்ளார்.

மேலும், பல இடங்களில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது, அதனை முறையாக தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குசாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம், தங்களது கடமையை உணர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும், இந்த தேர்தல் வித்தியாசமான ஒன்று தான், பணபலம் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என பேட்டியளித்துள்ளார்.

 

நடிகர் அஜித்

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து திருவான்மியூர் தொகுதியில் உள்ள வாக்குசாவடியின் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார், இதற்காக காலை 6.50 மணிமுதலே வரிசையில் காத்திருந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாலிகிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகை கவுதமியும் தனது வாக்கை பதிவு செய்தார்.

 

ராஜேஷ் லக்கானி

அரும்பாக்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம், வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்ததுடன் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து தகவல் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஈரோட்டில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன்

சென்னை ஆதம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது வாக்கை பதிவு செய்தார்.

குஷ்பு

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு மந்தவெளியில் வாக்களித்தார், பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், தோல்வி பயத்தால் அதிமுக பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமிழக மக்கள் அதிமுக-வுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட 99 சதவிகித பணம் அதிமுக-வுடையது எனவும் பேசியுள்ளார்.

advertisement

அதுமட்டுமின்றி நோட்டாவுக்கு “நோ” சொல்லுங்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

முக ஸ்டாலின்

திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தேனாம்பேட்டையில் தனது மனைவி, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் என குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும், முறைகேடு நடந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மக்கள் நினைக்கிறார்கள் என்று பேட்டியளித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அவர் பேட்டி அளிக்கையில், கல்வி மற்றும் மருத்துவத்தினை இலவசமாக தரும் அரசியல் வரவேண்டும். தஞ்சாவூர், அரவங்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெறாது ஜனநாயகத்திற்கு விரதோமானது. என்னுடைய ஜனநாயக கடமையை நான் முடித்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தா.பாண்டியன்

சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடைபெற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், பல கட்சி தலைவர்கள் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்

பெரியகுளம் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

ராமதாஸ்

வாக்களிக்க வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, இது ஒரு வித்தியாசமான தேர்தல், திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து தமிழ் நாட்டை சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள், அவற்றையெல்லாம் மாற்றுவதற்காக அன்புமணி கண்டிப்பாக ஆட்சிக்கு வருவார் என கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி கண்டிப்பாக நடக்கும் என கூறியுள்ளார்.

செல்வி ஜெயலலிதா

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு தனது தோழி சசிகலாவுடன் சென்று ஜெயலலிதா வாக்களித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், இவ்வளவு நாள் பொறுத்துவிட்டீர்கள், இன்னும் 2 நாட்களின் மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும் என கூறியுள்ளார்.

விஜயகாந்த்

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்துள்ளார்.

கனிமொழி

மயிலாப்பூர் தொகுதியில் வாக்களித்தார் கனிமொழி, அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது, மேலும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகமான முறையில் பணப்பட்டுவாடா நடக்கிறது என நாங்கள் ஏற்கனவே புகார் கூறியுருந்தோம் என தெரிவித்துள்ளர்.

இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதி என கூறியுள்ளார்.

வைகோ

கலிங்கம்பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்த வைகோ திமுக மற்றும் அதிமுக கட்சிகள் நடத்திய பணப்பட்டுவாடாவினை குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், சில தேர்தல் அதிகாரிகளையும் குற்றம்சாட்டியுள்ளார்.

ரங்கசாமி

புதுச்சேரியில் ரங்கசாமி மிகவும் எளிமையான முறையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இல.கணேசன்

மேற்கு மாம்பலத்தில் வாக்களித்த இல.கணேசன் அவர்கள், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்கு திகதியினை ஒத்திவைப்பதனால் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. அதற்கு பதிலாக குற்றத்தில் ஈடுபட்ட வாக்காளரை தேர்தலில் இருந்து நீக்கி மாற்று வேட்பாளரை கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிலம்பரசன்

மாற்றம் தேவையில்லை, எது நடக்க இருக்கிறதோ அது நடக்கட்டும், பொதுவாக நல்லது நடந்தால் போதுமானது. சீக்கிரம் அனைவரும் வந்த ஓட்டு போட்டால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

 

SHARE