இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாக வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகங்களுக்கு இன்றைய நாடாளுமன்ற அமர்வு குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளுக்காக நாள் தோறும் ஐந்து லட்சம் ரூபா செலவிடப்படுகின்றது, எனவே அமர்வுகளை நடாத்தாவிட்டால் இந்த பணம் விரயமாகும்.
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க என்னாலான முழுமுயற்சிகளை மேற்கொள்வேன்.
மக்களுக்காக சேவையாற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஒருநாள் கொஞ்சம் நனைவதில் பிரச்சினையில்லை. காலணிகளை கழற்றி வைத்து விட்டேனும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு வர முடியும்.
அமர்வுகளுக்காக ஐந்து லட்சம் ரூபா செலவாகும். எனவே அந்தப் பணத்தை விரயமாக்க நான் விரும்பவில்லை. சில முக்கியமான சட்ட மூலங்கள் நிறைவேற்றிக் கொள்ளப்படவுள்ளன.
காலநிலை மேலும் மோசமடைந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்குள் பிரவேசிக்க வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரிச் சட்டம் தொடர்பிலான விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.