கடுகண்ணாவ பிரதேசத்தில் பாரிய மண் சரிவு, மூவர் சடலமாக மீட்பு

256

கடுகண்ணாவ பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடுகண்ணாவ, இலுக்வத்த பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மண்சரிவு காரணமாக ஆறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காணமல் போனவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடுகன்னாவ மண்சரிவு: காணாமல் போனவர்களில் மூவர் சடலமாக மீட்பு

கடுகன்னாவ, இலுக்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனதாக கூறப்பட்டவர்களில் மூவரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த மண்சரிவு காரணமாக ஆறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காணமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மூவரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

SHARE