கினிகத்தேன நாவலபிட்டி பிரதான பாதையில் போக்குவரத்து நடவடிக்கைககள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான பாதையின் மீபிட்டிய பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மண்சரிவுடன் நிலம் தாழிறங்கியது. இந் நிலையில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம் என குறித்த மார்க்கத்தில் போக்குவரத்து 17.05.2016 மதியம் 12 மணிமுதல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் பயனிகளின் நலன் கருதி பஸ் சேவை குறித்த இடத்திலிருந்து நடைபெறுவதாகவும் ஏனைய வாகனங்கள் மாற்று வழிகளில் பயணங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் ராமசந்திரன்