தமிழகத்திலிருந்து மேலும் 31 ஈழ அகதிகள் இவ்வாரம் தாயகம் திரும்புகின்றனர்

248

யுத்தம் காரணமாக இந்தியாவிற்குச் சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த ஈழ அகதிகள் 31 பேர் நாளை மறுதினம் வியாழக்கிழமை தாயகம் திரும்பவுள்ளனர்.

மீள்குடியேற்றம் புனர்வாழ்வு,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இவர்களில் 18 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக அமைச்சு கூறியுள்ளது.

இவ்வாறு தாயகம் திரும்புகின்ற ஈழக அகதிகள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார் முல்லைத்தீவு, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

இந்தியாவிலுருந்து தாயகம் திரும்பி மீள்குடியமரும் அகதிகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் 65,000 வீட்டுத் திட்டத்தில் வீடுகள் வழங்கப்படுமென மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.tamil tha

SHARE