திருமலை கடற்கரையில் சிவாஜிலிங்கம் சுடர் ஏற்றி அஞ்சலி

267

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த சம்பூர் மக்களை நினைவு கூரும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

2009ம் ஆண்டின் மே 19ம் திகதி நிறைவடைந்த இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூறும் நிகழ்வுகளின் ஒருகட்டமாக சம்பூர் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு திருகோணமலை கடற்கரையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் டெலோ அமைப்பின் நிர்வாகச் செயலாளர் எஸ். நித்தியானந்தனும் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலம் தொட்டு பல்வேறு அதிகாரப் பரவலாக்கல் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்களுக்கு எவ்வகையான நிவாரணமும் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.ringoringo01ringo02ringo03

SHARE