மட்டக்களப்பில் சில பிரதான நீர்ப்பாசனக் குளங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு

261

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்கின்ற அடை மழை காரணமாக சில பிரதான நீர்ப்பாசனக் குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் இரண்டு அடிக்கு திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சந்திரசேகரன் நிரோஜன் தெரிவித்தார்.

உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 24 அடியிலிருந்து 28 அடி 2 அங்குலமாக அதிகரித்துள்ளது. உறுகாமக் குளத்தின் நீர்மட்டம் 11 அடி 9 அங்குலத்திலிருந்து 16 அடி 5 அங்குலமாகவும் அதிகரித்துள்ளதுடன், 4 அங்குலம் வான்பாய்கின்றது.

வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் 18 அடி ஒரு அங்குலமாக அதிகரித்துள்ளது. மாவடியோடை வான்கதவுடன் கூடிய பாலத்தின் நிர்மாண வேலை முடிவடையாமையால், நீர் வழங்குவதற்காக மாவடியோடை ஆற்றை மறித்து அமைக்கப்பட்ட மணல் அணை வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்துள்ளது.

முந்தனை ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததை அடுத்து ஆற்றை மறித்து அமைக்கப்பட்ட கிரான் புல்ச்சேனை அணை உடைப்பெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.117.560.350.160.300.053.800.210.160.90

SHARE