மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களும் விடுதலை.

270

எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரும் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை முற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே அவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

இந்த நிலையில் விடுதலை செய்யபட்டுள்ள மீனவர்களை தமிழகத்திற்கு அனுப்பிவைப்பதற்காக நடவடிக்கையினை யாழ் இந்திய துணைதூதரகம் மேற்கொண்டு வருகிறது.

குறித்த மீனவர்களை யாழ் அழைத்து சென்று அங்கிருந்து தமிழகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.mannarmannar01mannar02

SHARE