பச்சைக்கொடிக்கு பதிலாக பச்சை இலையை காட்டிய ரயில் கடவை பாதுகாப்பாளர்..!

277

ரயில் ஒன்று சமிக்ஞைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் கடவையின் பாதுகாப்பாளர் பச்சைக்கொடிக்கு பதிலாக பச்சை இலையை காட்டிய சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது.

புகையிரத கடவையின் பாதுகாப்பாளர் ஒருவர் கழிப்பறைக்கு சென்றிருந்த போது ரயில் ஒன்று வந்துள்ளது.

இதன்போது சமிக்ஞை கிடைக்காததால் குறித்த ரயிலின் சாரதி ரயிலை நீண்ட நேரம் நிறுத்தி வைத்ததுடன் ஊதுகுழலையும் ஒளிக்கவிட்டுள்ளார்.

அவ் ஓசையை கேட்டு கழிப்பறையிலிருந்து அவசரமாக ஓடிவந்த ரயில்கடவை காப்பாளர் பதற்றத்தில், சிகப்பு மற்றும் பச்சை வர்ண கொடிகள் அருகே இருந்த போதிலும் அவசரத்தில் பச்சை கொடிக்கு பதிலாக பச்சை இலையொன்றை காட்டியுள்ளார்.

இச்சம்பவத்தினால் கோபமடைந்த ரயில் சாரதி குறித்த நபரை கடுமையாக எச்சரித்துள்ளார்.

station-master

 

SHARE