பலத்த காற்றினால் அருந்து வீழ்ந்த மின்கம்பியால் போக்குவரத்து தடையேற்பட்டுள்ளது
அட்டன் நுவரெலியா பிரதான பாதையில் மின் கம்பி அறுந்து வீழ்ந்ததால் சுமார் ஒரு மணித்தியாலம் வரை போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பகுதியில் 17.05.2016 காலை 8.30 மணிமுதல் 9.30 மணிவரை போக்குவரத்து தடையோட்பட்டுள்ளது.
அதிக காற்றினால் பாதையோரமிருந்த மின் கம்பத்திலிருந்த மின் கம்பியானது பாதையின் குருக்கே வீழ்ந்த நிலையிலே இச்சம்பவம் சம்பவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற அட்டன் மின்சார சபையினர் அறுந்து கிடந்த மின் கம்பியை அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
(ராமசந்திரன் ரஞ்சித்ராஜபக்ஷ)