
இலங்கையை அண்டிய வங்களாவிரிகுடா கடற்பரப்பில் நிலவி வந்த தாழமுக்க நிலையில் மாற்றம் ஏற்படும் எனவும் தொடர்ந்தும் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறைக்கு 280 கடல் மைல் தொலைவில் இந்த நிலைமை காணப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் தற்போதுநிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை இன்னம் சில தினங்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினம் தென் மேற்கு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.