
இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் Della Vedova இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக இலங்கைள வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
2006ம் ஆண்டு அப்போதைய இத்தாலி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், இத்தாலிய உயர் மட்ட அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சர், மின்வலு எரிசக்தி அமைச்சர், விசேட திட்டங்கள் அமைச்சர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர், அபிவிருத்தி தந்திரோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான அமைச்சர் ஆகியோரை இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.