வடமேல், சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

256

வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடமேல் மாகாண பாடசாலைகள் நாளை வியாழக்கிழமை தொடக்கம் வழமை போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மண்சரிவின் பாதிப்பு அதிகமாகவுள்ள நிலையில் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையே கொழும்பு மாவட்டத்திலும் கொட்டாவ, பன்னிப்பிட்டிய மற்றும் மொரட்டுவ பிரதேசங்களில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

schools-closed

SHARE