முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள்!- உயிரிழந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்துவோம்!

286

இலங்கையில் தமது உரிமைகளுக்காக போராடிய தமிழினத்துக்கெதிராக இலங்கைஅரசாங்கமும் சர்வதேச சமூகமும் பார்த்திருக்க மனித குலத்திற்கெதிரான குற்றங்கள்என சர்வதேசத்தால் வரையறை செய்யப்பட்ட மாபெரும் இனப்படுகொலைகள், பாலியல்வன்முறைகள், யுத்த குற்றங்கள் புரியப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துள்ளஇந்நிலையில் தமிழ் மக்களாகிய நாம் எமக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கும்பேரிழப்புக்களுக்குமான நியாயத்தை கோரி நிற்கின்றோம் .

இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது எறிகணைவீச்சுகள், பல்குழல் எறிகணை தாக்குதல்கள், தடை செய்யப்பட்டகொத்துக்குண்டுத் தாக்குதல்கள், விமான குண்டுவீச்சுக்கள் என்பவற்றால் எமதுமக்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடாத்தி தமிழினத்துக்கெதிராகமிகப்பெரும் படுகொலைகள் புரிந்தது.

சிறுவர்கள் பெண்கள் முதியோர்கள்கர்ப்பிணிப்பெண்கள் என பலரும் வகைதொகையின்றி இலங்கை அரச பயங்கரவாத செயல்களால்கொலை செய்யப்பட்டனர்.

அந்தவகையில் எம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டஅநீதிகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களில் நானும் எனதுஒற்றைக்காலை பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது இலங்கைஇராணுவத்தினர் நடாத்திய செல் தாக்குதலினால் இழந்த வலியையும் அதன் வேதனையையும்சுமக்கின்றவள்.

இறுதி யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி நாட்களில் மனித உரிமை மீறல்கள்பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள், யுத்தக்குற்றங்கள் அதிகமாக இடம்பெற்றதனைஆதாரங்களுடன் சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்திய போதிலும் அதுபற்றிய எவ்விதவிசாரணைகளையும் முன்னெடுக்காது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குநியாயம் வழங்காது இழுத்தடிப்புச்செய்கின்ற செயல்கள் தொடர்ந்துஇடம்பெற்று வருவது வேதனையளிக்கின்றது.

எமது இனம் கடந்த காலத்தில் சந்தித்த இழப்புக்கள் ஈடு செய்யப்பட முடியாதவை.

இனப்பிரச்சினை தோற்றம் பெற்ற காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிவரை எம்இனம் சந்தித்த துன்பங்கள் சொல்லிலடங்காது.

இனவிடுதலைக்காக போராடியதமிழினத்திற்கெதிராக பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையான அடக்கு முறைகளைஇலங்கை அரசாங்கங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதனை எமது வரலாற்றில் நாம்காணலாம்.

எனவே இந்த மே – 18ல் எமது இன விடியல் பயணத்தில் மூச்சடங்கிப் போன உறவுகளைநினைவில் நிறுத்தி ஒன்றுபட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, எமது எதிர்கால சந்ததியினரின் சுதந்திரவிடிவிற்காய் பயணிப்போம்.

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

download

SHARE